Sunday, 28 February 2016

ஒற்றைத் தலைவலி - பாகம் 2

ஒற்றைத் தலைவலியை (MIGRAINE HEADACHE) குறைக்கும் வழி!
நவீன வாழ்க்கை முறை, வேலை நெருக்கடியால் Migraine headache எனப்படும் ஒற்றைத் தலைவலி பாதிப்பு கடுமையாக அதிகரித்துவருகிறது. சரியான வாழ்க்கை முறை, மாற்று மருத்துவ முறைகள் மூலம் இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வளர்ந்தவர்களில் 50 சதவீதம் பேர் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றனர். வெளிச்சம், அதிகச் சத்தம் ஆகியவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டுவதற்கான பொதுவான காரணங்கள். மூக்கடைப்பு, வாந்தி போன்றவை ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள்.
தாங்க முடியாத அளவுக்குத் தலையின் ஒரு பகுதியில் ஏற்படும் வலி, மிதமாகவோ / அதிகபட்ச அளவிலோ 4 மணி நேரம் முதல் 3 நாட்களுக்கு (72 மணி நேரம்வரை) நீடிக்கலாம். ஒற்றைத் தலைவலி ஒருமுறை வந்துவிட்டால், அதன் பின் அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு உண்டு.
போதிய அளவுக்கு ஓய்வு எடுக்காமல் இருப்பது, சத்தான உணவைச் சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பது, மாறிவரும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஒற்றைத் தலைவலியால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
* ஆயுர்வேத அணுகுமுறை
வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். பொதுவாக வலி தோன்றும் பகுதியில் குளிர்ந்த நீரை வைப்பது தற்காலிக நிவாரணம் தரும்.
ஆயுர்வேத சிகிச்சையில் இதற்கு நிவாரணம் கிடைக்கும். மீண்டும் வராமல் தடுக்கவும் முடியும். மன இறுக்கம், வேலைச் சூழல், ஹார்மோன் சமநிலையில்லாமை போன்ற காரணங்கள் ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கின்றன. ஆயுர்வேதத்தில் இதை `சூர்யவர்தா’ என்று குறிப்பிடுகிறோம்.
தலையில் உள்ள நரம்புகள், ரத்தச் செல்கள் வீக்கமடைவதால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. உணர்ச்சிமிகுந்த - இறுக்கமான மனநிலை, வேலைச் சூழலால் அதிகரிக்கும் பணிப் பளு, உடல் அழற்சி, உணவுப் பழக்கத்தில் சீரற்ற நிலை, மது அருந்துதல், புகையிலை போடுதல், அதிக அளவில் மருந்து சாப்பிடுவது ஆகியவை காரணமாக ஒற்றைத் தலைவலி எனப்படும் `Migraine headache’ உருவாகிறது.
பெண்களுக்குப் பொதுவாக ஹார்மோன் சீரற்ற நிலையால் அதாவது மாதவிடாய் காலம், குழந்தைப்பேறு காலம், மாதவிடாய் சுழற்சி நிற்கும் வேளைகளில் இது தோன்றுகிறது.
* வேலை இறுக்கம்!
இப்போது இளைஞர்கள் பலரும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவதைக் காண முடிகிறது. பெரும்பாலும் அவர்களுடைய வேலை காரணமாக இளைஞர்களை இத்தலைவலி பாதிக்கிறது. இலக்கை எட்ட வேண்டிய நிர்ப்பந்தம், அதிக நேரம் கணினி வேலை காரணமாக ஒற்றைத் தலைவலி தூண்டப்படுகிறது.
* எப்படிச் சமாளிக்கலாம்?
நோயாளியின் உடல் அமைப்பைச் சரியாகக் கணித்து, அவரது பின்னணியை அறிந்துகொள்ள வேண்டும். அவரது உளவியல், உடலியல் சார்ந்த விஷயங்களைச் சரிவரக் கணித்து அவருக்கு ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைவலியின் அளவை மதிப்பிட வேண்டும்.
குறிப்பாக 3 முக்கிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். சரியான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆகியவை தான் அந்த மூன்று வழிகள்.
* வாழ்க்கை முறை மாற்றம்!
இறுக்கமான சூழலிலிருந்து விலகி ஒய்வெடுப்பது. அதிக இரைச்சல் மற்றும் பிரகாசமான ஒளி ஆகியவற்றைத் தவிர்ப்பது.
* உணவுப் பழக்கம்!
சரியான உணவு வகைகளை உண்பதன் மூலம் நோயாளியின் உடலியல் கூறுகள் மாறுபடும். இது தலைவலி உருவாவதற்கான காரணிகளை மட்டுப்படுத்தும். மேலும் தலைவலி அதிகரிப்பதைக் குறைக்கும். அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவு வகைகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகள், புளிப்புச் சுவையுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, உணவை மென்று சாப்பிடுவது ஆகியனவும் தலைவலியின் வீரியத்தைக் குறைக்கும்.
* இரண்டு கட்ட சிகிச்சை!
தலைவலியின் தன்மைக்கேற்ப ஆயுர்வேத சிகிச்சை முறை 2 கட்டங்களாக அளிக்கப்படுகிறது. வேகவஸ்தா – தலைவலி ஏற்படும்போது, அவெகவஸ்தா – தலைவலி இல்லாதபோது என இரண்டு வகைப்படும்.
* வேகவஸ்தா சிகிச்சையின்போது ஆயுர்வேத முறைப்படி சாப்பிடக்கூடிய மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இவை வயிற்றைச் சுத்தம் செய்ய உதவும். வயிற்றில் தங்கியுள்ள நச்சுகளை அகற்ற இவை உதவும். இதுதவிர வெளிப் பயன்பாட்டுக்குச் சில எண்ணெய்கள் தரப்படுகின்றன. இது ரத்த நாளங்களைச் சீராக்கி ரத்த ஓட்டத்தைச் சமன் செய்கிறது.
* அவெகவஸ்தா முறையில் ஒற்றைத் தலைவலி இல்லாத வேளையிலும் தற்காப்பு மருந்துகளை மருத்துவர் அளிப்பார். இதன்மூலம் ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படுவது தடுக்கப்படும். ஆயுர்வேத சிகிச்சையில் நஸ்யம், சிரோத்ரா, சிரோவஸ்தி ஆகிய சிகிச்சைகள் இதற்கு அளிக்கப்படுகின்றன.
* மற்ற சிகிச்சைகள்
நஸ்யம்!
இந்த முறையில் மருத்துவக் குணங்கள் கொண்ட எண்ணெயைத் தலை, முகத்தில் தடவ வேண்டும். அது நன்கு ஊறிய பிறகு நாசித் துவாரங்களில் சில மருந்துகளை ஊற்ற வேண்டும். ஆயுர்வேத சிகிச்சையில் அளிக்கப்படும் மருந்துகளின் அளவு, அவற்றின் தன்மை ஆகியவை நோயின் வீரியத்துக்கு ஏற்பவும் நோயாளியின் வயதுக்கு ஏற்பவும் பருவ நிலைக்கு ஏற்பவும் மாறுபடும். நஸ்யம் சிகிச்சையின்போது வீக்கமடைந்த பகுதிகள், பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரடையும். இந்தச் சிகிச்சையைக் குறைந்தது 7 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
* சிரோவஸ்தி
வெதுவெதுப்பான நீரில் மருந்து எண்ணெயை ஊற்றி, இதற்கென விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தொப்பியாக அணிந்துகொள்ள வேண்டும். இந்த வகை சிகிச்சை மன இறுக்கம் சார்ந்த ஒற்றைத் தலைவலிக்கு மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
 வாழ்நாளில் தலைவலியை எப்போதாவது ஒரு சமயம் அனுபவித்திருக்காதவர் இருக்கவே முடியாது. தலைவலிக்குப் பெரும்பாலும் பரபரப்புத் தன்மையே காரணம்.ஒருவர் இளமைக் காலத்தில், 20 முதல் 40  வயது வரை பரபரப்புடன் செயல்படுவதால் அக் காலகட்டங்களில் தலைவலி வருவது இயல்பாக உள்ளது.  முதுமையில் தலைவலியின் தாக்கம் குறையத் தொடங்கி விடும். வலி தலையில்தான் என்றாலும் கூட,கண் கோளாறால் ஏற்படும் சாதாரண தலைவலி உள்பட ஒற்றைத்  தலைவலி வரை அறிகுறிகள் வேறுபடும். தலைவலியைப் பொருத்தவரை அது வந்து போகும் கால அளவு  கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். உதாரணமாக இரண்டு மாதத்திற்கு அல்லது ஆறு மாதத்திற்கு  ஒரு முறை வரும் தலைவலிக்குத் தொடர் சிகிச்சை தேவை இல்லை. ஆனால் அடிக்கடி தலைவலி வரும்  நிலையில் சுயமாக மாத்திரை சாப்பிட்டுக் கொண்டே இருக்காமல் மருத்துவ சோதனை அவசியம்.
இனி ‘தலைவலி’ இல்லாதபோது நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ள……
தலைவலிக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு என்ன?
மூளையை அறுத்தால் எந்த வலியும் ஏற்படாது. ஏனெனில் மூளைக்குள் நரம்புகள் கிடையாது என்பதால்  உணர்ச்சி கிடையாது. ஆனால் மூளைக்கு வெளியே உள்ள மூளை உறை, எலும்பு உறைகள், ரத்தக் கு ழாய்கள், தோல் ஆகியவற்றை ஒட்டி வலிகளை உணர்த்தக்கூடிய நரம்புகள் உள்ளன. இந்த உறுப்புகளில்  பாதிப்பு ஏற்டும் நிலையில் நரம்பு மூலமாக தலைவலி ஏற்படுகிறது. சைனுசைட்டிஸ் நோய்ப் பிரச்சினை  இருந்தாலும் தலைவலி வரும்.
பரபரப்பு,சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் இருத்தல் உள்பட பல காரணங்களால் நோய்களின் பின்னணி  இன்றித் தலைவலி வரலாம். சைனுசைட்டிஸ்  மூளைக் காய்ச்சல் உள்பட நோய்கள் காரணமாகவும்  தலைவலி வரக்கூடும்.
பொதுவான தலைவலிகள் யாவை?
1. குறைத் தூக்கத்தால் ஏற்படும் தலைவலி; 2. அதிகத் தூக்கத்தால் ஏற்படும் தலைவலி; 3. பசியினால்  ஏற்படக்கூடிய தலைவலி; 4. தாமதமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் தலைவலி; 5. குறைவாகச் சாப்பிடுவதால்  ஏற்படக்கூடிய தலைவலி; 6. விரதம் இருப்பதால் ஏற்படும் தலைவலி; 7. பழகிவிட்ட குறிப்பிட்ட நேரத் துக்குக் காபி குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் தலைவலி; 8. ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற உணவுப்  பொருள் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் தலைவலி; 9. பதற்றத்தால் ஏற்படும் தலைவலி; 10. பார்வைக்  கோளாறு காரணமாக ஏற்படும் தலைவலி; 11. சைனுசைட்டிஸ் காரணமாக ஏற்படும் தலைவலி; 12. காதில்  சீழ் பிடிப்பதால் ஏற்படும் தலைவலி; 13. மதுப் பழக்கம் காரணமாக ஏற்படும் தலைவலி; 14. மருந்து களினால் ஏற்படும் தலைவலி; 15. எதிர்பார்ப்பு நிறைவேறாமல் ஆழ்ந்த மன வருத்தம்  (Depression) காரணமாக ஏற்படும் தலைவலி; 16. வாகனப் புகை காரணமாக ஏற்படும் தலைவலி.
தலைவலி என்று ஒருவர் சொன்னாலே கண் மருத்துவ சோதனை செய்து கொள்ளுமாறு நண்பர்கள்  கூறுவது வழக்கமாக உள்ளதே? இந்தக் கருத்து சரியா?
சரி அல்ல. கண் நரம்புகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளது. எனினும் கண் தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் புத்தகம் படித்தல், கம்ப்யூட்டரில் வேலை செய்தல்,பார்வைக்கோளாறு ஆகியவை  காரணமாக தலைவலி வந்தால் கண்டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.  சாதாரணமாக தலைவலி வரும் நிலையில் மருத்துவரிடம் அல்லது நரம்பியல் மருத்துவரிடமோ சென்றால்  போதும்.
காய்ச்சல் காரணமாக தலைவலி வருவது ஏன்?
காய்ச்சலின்போது உடலில் ரத்த ஓட்டம் அதிகமாகும்.இதனால் ரத்தக்குழாய்கள் விரிவடைந்து தலைவலி ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்த அளவு (Systolic Pressure) இயல்பான அளவைவிட அதிகரிக்கும் நிலையிலும் தலைவலி வரும்.
தலைவலியின் வகைகள் யாவை?
தலைவலியை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. பரபரப்புத் தன்மை காரணமாக ஏற்படும் தலைவலி
(Tension Type Headache);
2. ஒற்றைத் தலைவலி (Migraine); 3. தொகுப்புத் தலைவலி (Cluster Headache); 4.  நாள்பட்ட நித்தம் தலைவலி (Chronic Daily Headache).
‘டென்ஷன்’ காரணமாக ஏற்படும் தலைவலியின் குறிப்பிட்ட அறிகுறிகள் என்ன?
ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற டென்ஷன் காரணமாக தலைவலி  ஏற்படலாம். வேலைப்பளு, அதிக தூக்கம், நீண்டதூரப் பயணம், உடல் தசைகள் அதிக அளவுக்குச் சுரு ங்குதல் காரணமாக இத்தகைய தலைவலி வரும். பொதுவாக இந்தத் தலைவலி தாங்கக்கூடியதாக இருக்கும்.  இந்தத் தலைவலியில் வாந்தி, குமட்டல் இருக்காது. வெளிச்சத்தைக் கண்டால் கண் கூசுதல், ஓசையைக்  கேட்டாலே வெறுப்பு ஆகிய உணர்வுகள் இருக்காது.
எனினும் தசைகள் அதிக அளவுக்குச் சுருங்குதல் காரணமாக டென்ஷன் தலைவலி ஏற்படும் நிலையில்  தலையில் கை வைக்க முடியாத அளவுக்கு, சீப்பைக் கொண்டு தலையை வார முடியாத அளவுக்கு வலி  இருக்கும்.
ஒற்றைத் தலைவலியின் முக்கிய அறிகுறிகள் என்ன?
மாதக் கணக்கில், வருஷக் கணக்கில் விட்டு விட்டு வரும் தலைவலி ஒற்றைத்தலைவலி (‘மைக்ரேன்’   Migraine) எனப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல் இந்த வலி தலையில் ஒரு புறம் மட்டுமே  வரலாம்; தலையில் இரு புறமும் மாறி, மாறியும் அல்லது பிடரியில் வலி வந்தாலும் ஒற்றைத்  தலைவலிதான்.
மக்கள் தொகையில் 10ல் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளது. ஒருவரது இயல்பான  வாழ்க்கையை முடக்கும் ஆற்றல் ஒற்றைத் தலைவலிக்கு உண்டு. அதாவது மருத்துவ விடுப்பு எடுத்துச்  சிகிச்சை பெறும் அளவுக்கு இந்தத் தலைவலி இருக்கும்.
சுத்தியல்களால் அடிப்பதுபோல் வலி மண்டையைப் பிளக்கும். வாந்தி, குமட்டல் இருக்கும். வெளிச்சத்தைப்  பார்த்தால் கண்கள் கூசும். இந்த வலி வரும்போது ஓசையைக் கேட்டாலே வெறுப்புணர்வு ஏற்படும்.  தலையைக் குனிந்தால் வலி ஏற்படும். நடந்தால் தலைவலி அதிகமாகும். உடலின் சிறு அதிர்வு களுக்குக்கூட வலி அதிகமாகி வாந்தி வரும்.வாசனை காரணமாகவும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். மேலே சொன்ன பொதுவான தலைவலிகளும் (குறைத் தூக்கம், பசி, ஐஸ்கிரீம், சாக்லெட் போன்ற உணவுப்  பொருள்கள்…..) ஒற்றைத் தலைவலியைத் தூண்டும்.
ஒற்றைத் தலைவலிப் பிரச்சினைக்கு பாரம்பரியத் தன்மை உண்டா?
உண்டு. குடும்பத்தில் அப்பா, அம்மா, மாமா, சித்தப்பா, உடன் பிறந்தோர் ஆகியோரில் யாராவது ஏற்கெனவே ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தால் ஒற்றைத் தலைவலி பிரச்சினை வர வாய்ப்பு  உண்டு. ஆண்களைவிட பெண்களே ஒற்றைத் தலைவலி பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  குறிப்பாக மாதவிடாய் வருவதற்கு முன்பு பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.கர்ப்பிணிப் பெ ண்களுக்கு ஒற்றைத் தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
தொகுப்புத் தலைவலியின் (Cluster Headache) அறிகுறிகள் என்ன?
ஒற்றைத் தலைவலியில் மிகவும் கொடியது இந்த வகை (சிறீustமீக்ஷீ பிமீணீபீணீநீலீமீ). இந்தத்  தலைவலி பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் வரும். இந்தத் தலைவலி தூக்கத்தில் வரும். தூங்கிக்  கொண்டிருக்கும் நோயாளிக்கு வலியை உருவாக்கி அவரை எழச் செய்யும் ஆற்றல் இந்த வகை ஒற்றைத்  தலைவலிக்கு உண்டு. ஏதாவது ஒரு பக்கம் மட்டுமே இந்தத் தலைவலி இருக்கும். வலி வரும் பக்கத்தில்  உள்ள மூக்குத் துவாரத்திலிருந்து மூக்கில் நீர் ஒழுகும். ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு முறை இந் தத் தலைவலி வரும். வாந்தி, குமட்டல் இருக்காது. வலி போகும் வரை தூக்கம் வராது. மதுப் பழக்கம்  உள்ளவர்களுக்கு இது போன்ற தலைவலி வரும்.
நாள்பட்ட நித்தம் நித்தம் தலைவலி (Chronic Daily Headache) அறிகுறிகள் என்ன?
பரபரப்புத் தன்மையால் ஏற்படும் தலைவலி (Tension Type Headache), ஒற்றைத் தலைவலி  (Migraine) ஆகியவை காரணமாக தினந்தோறும் மருந்து சாப்பிடும் பழக்கத்தை சிலர்  மேற்கொள்வர். ஒரு கட்டத்தில் மருந்துக்குக் கட்டுப்படாத தலைவலியாக மாறி நித்தம் நித்தம் தலைவலி  வரக்கூடும். இத்தகைய வலி வருவோருக்கு வலி வருவதற்கு முன்பே தலைவலி மாத்திரையைச் சாப்பிடும்  பழக்கம் இருக்கும்.
பிடரியில் (தலையில் பின்புறம்) வலி வந்தால் கழுத்தில் பிரச்சினை எனக் கொள்ள வேண்டுமா?
கழுத்தில் ஏழு எலும்புகள் உள்ளன. இதில் மேல் புறம் உள்ள முதல் மூன்று எலும்புகளுக்கும் மூ¬ ளக்கும் தொடர்பு உண்டு. இந்த எலும்புகளில் பிரச்சினை ஏற்படும் நிலையில் தலையின் பின்புறம் வலி  ஏற்படும். இந் நிலையில் கழுத்தைத் திருப்புவதும் சிரமமாக இருக்கும். எக்ஸ்ரே உள்பட பரிசோதனைகள்  செய்துகொண்டு சிகிச்சை பெறுவது அவசியம். ஏனெனில் ஒற்றைத் தலைவலி காரணமாகவும் பிடரியில்  வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.
தலைவலி சிகிச்சையில் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுவது என்ன?
ஒருவருக்கு எவ்வளவு கால இடைவெளி விட்டு தலைவலி வருகிறது என்பதைப் பொறுத்து சிகிச்சை  தேவையா என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு ஒரு மாதத்துக்கு ஒரு முறை தலைவலி வரலாம்.  ஒரு சிலருக்கு மூன்று நாளுக்கு ஒரு முறை மூன்று மணி நேரம் தலைவலி வந்து போகலாம்.ஒரு சில ருக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறை தலைவலி வரலாம். ஒரு சிலருக்கு தினந்தோறும் தலைவலி வரலாம்.  ஒரு சிலருக்கு தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாள்களுக்குத் தலைவலி இருக்கலாம்.
எப்போதாவது ஒரு முறை வரும் தலைவலிக்குச் சிகிச்சை தேவை இல்லை. பசி, நேரம் கழித்துச் சாப்பிடு தல், போதிய தூக்கம் இல்லாமை உள்பட பொதுவான தலைவலிகளுக்கு அவற்றுக்கு உரிய காரணங்களை  நோயாளிகள் தாங்களாக தவிர்த்துவிடுவதே எளிய சிகிச்சையாகும். குறிப்பாக அதிக அலைச்சலால் ஏற்ப டும் தலைவலிக்கு ஓய்வு எடுத்தாலே சரியாகிவிடும். ஆனால் ஒற்றைத் தலைவலி உள்பட அடிக்கடி வரும்  தலைவலிக்கு மருத்துவப் பரிசோதனை செய்து உரிய காரணத்தைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிப்பது  அவசியம்.
சிகிச்சை தேவையா என்பதைக் கண்டறிவது எப்படி?
பாரம்பரியத் தன்மை உள்பட நோய் குறித்து நோயாளி கூறுவதை (Patient History)  முதலில் கேட்க வேண்டும் பின்னர் நோயாளியின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பது அவசியம்.  இதையடுத்து மூளையின் அதிக அழுத்தம் இருந்தால் வெளிப்படுத்தக்கூடிய ‘ஆப்தல்மஸ்கோப்’ கருவி  மூலம் கண்களைப் பரிசோதனை செய்ய வேண்டும். இப்பரிசோதனையில் மூளைக்குச் செல்லும் பார்வை  நரம்பு வீக்கம் அடைந்திருந்தால் (Papilloedema) தெரிந்துவிடும். இதனால் மூளையில் அழுத்தம்  அதிகமாக இருக்கும். இதுபோன்ற நிலையில் மேற்கொண்டு சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற  மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும்.
ஒற்றைத் தலைவலியின் சாதக அம்சம் என்ன?
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோருக்கு வலிவருவதற்கு முன்பே தெரிந்து விடும். இந்நிலையில் மு ன்கூட்டியே மாத்திரையைச் சாப்பிடுவதன் மூலம் வலி கடுமையாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைக்கு ஆயுள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா?
முன்பே சொன்னது போல் வயது ஆக ஆக தலைவலிப் பிரச்சனை குறைந்துவிடும். எனவே ஆயுள்  முழுவதுக்கும் மாத்திரைகள் சாப்பிடும் தேவை இருக்காது. தலைவலிக்கு உரிய காரணத்தைக் கண்டறிந்து  மருந்து சாப்பிடுவது அவசியம்.
தலைவலிக்கான நிவாரண மருந்துகளை (Balms) நெற்றியில் தடவிக் கொள்வது நல்லதா?
தவறில்லை. எப்போதாவது வரும் தலைவலிக்கு இந்த நிவாரண மருந்துகள் பலன் அளிக்கக் கூடியவை.  இதே போன்று துணி  கர்சீப்பால் தலையை இறுகக் கட்டிக் கொள்வதிலும் தவறில்லை. துணியால் கட் டும்போது ரத்தக் குழாய்கள் விரிவடையாமல் தடுக்கப்பட்டு நிவாரணம் கிடைக்கிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும் நிலையிலும் இது போன்ற நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
அடிக்கடி தலைவலி வரும் நிலையில் காரணத்தைக் கண்டறிந்து, வராமல் தடுப்பதற்குச் சிகிச்சை செய்து கொள்வது அவசியம். அடிக்கடி தலைவலி வரும் நிலையில் தடுப்புக்கு மட்டுமே மாத்திரைகள் உதவும்;  அப்போது வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு மேலே சொன்ன கை வைத்திய முறைகள் பலன் அளிக்கும்

மூத்த மொழிகள்

இந்த பத்து மொழிகளை மட்டும் நீங்கள் சற்று உற்று நோக்கினால் போதும்.எந்த மொழி மிக மூத்த மொழி என்பது விளங்கும்.
நேர்கோடுகள் அதிகமாக உள்ள எழுத்துகளை உடைய மொழி நவீன மொழி ஆகும்.
அதிக வளைவுகளை கொண்ட எழுத்துக்களை உடைய மொழி புராதான மொழி ஆகும்.
இது ஒரு எளிமையான தர்க்கரீதியின்(LOGICAL) அடிப்படையில் ஒப்பிட்டு பார்ப்பதாகும்.


முகப்பரு

முகப்பரு,காய்ந்த சருமம்,வெடிப்பு,தீக்காயம்,குடல் சீரமைப்பு,முடி பேணுதல்,நோய் எதிர்ப்பு சக்தி முதலியவற்றிற்கு சோற்று கற்றாளை தான் இயற்கையான நிவாரணி.
தினமும் 1/2 கப் சாப்பிட்டு வந்தால் குடலின் ஜீரண சக்தி அதிகமாகும்.மலச்சிக்கல் நீங்கும்.
தலையில் முட்டை கலந்து நேரடியாக பயன்படுத்தினால் பொடுகு,வேர்க்குரு போன்ற தொல்லைகள் நீங்கும்.
தேனோடு கலந்த,பயத்தம் மாவு சேர்த்து முகத்தில் பூசி வர மென்மையான அழகு கிடைக்கும்.
பல் உபாதைகளுக்கும் இது அருமருந்தாக விளங்குகிறது.
புற்று நோய்க்கு அருமருந்தாக,நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.
தோல் அரிப்புக்கும்,தேங்காய் எண்ணையோடு சேர்த்து தடவி வரலாம்.
நவீன முறையில் எப்படி களிம்பு அல்லது உணவாக சாப்பிட,உங்கள் சந்தேகங்களை குறுந்தகவலாக அனுப்பவும்.
எப்படி உடலில் நோய் எதிர்ப்பு அதிகமாகிறது என்பதை கீழ்க்கண்ட ஆராய்ச்சியில் தெரிந்து கொள்ளலாம்:

ஒற்றைத் தலைவலி (Migraine Headache)

மனிதனை பாடாய்படுத்தும் நோய்களுள் ஒன்று... ஒற்றைத் தலைவலி. பெரும்பாலும் அதிகமான மன அழுத்தம் காரணமாகவே இது வருகிறது.

என்றாலும், குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் இது வரலாம்.

இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல் மற்றும் வயிறு பிரச்சினைகளை ஒற்றைத் தலைவலி வரும் ஒருவர் சந்திக்க நேரிடுகிறது.

ஒற்றைத் தலைவலி தீர எளிய வழிமுறைகள் உள்ளன. அவை...

* எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

* நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்தலாம்.

* முட்டைக்கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக்கொண்டு தலையின் மீது ஒத்தடம் தரலாம். முட்டைக்கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டி பயன்படுத்துங்கள்.

* குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டலாம். பின் கைகளையும் கால்களையும் சுடுநீரில் விடவும்.

* 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.

* வாசனை எண்ணெயால் தலைக்கு ஒற்றடம் தரலாம். தேய்த்தும் விடலாம்.

இவை தவிர, முன்னெச்சரிக்கையாக இருந்தும் ஒற்றைத் தலைவலி வருவதை தவிர்க்கலாம்.

புகை மற்றும் மது தலைவலியை தூண்டக் கூடியவை என்பதால் அவற்றை தவிர்த்திடுங்கள்.

மேலும், வெயிலில் அலைவது, காரமான உணவு வகைகளை உட்கொள்வது, வயிறு முட்ட சாப்பிடுவது, தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை கொள்வது போன்றவற்றை தவிர்த்து வந்தாலும் ஒற்றைத் தலைவலி நம்மை நெருங்காது.

அனைவருக்கும் பொதுவாக இருக்கும் உடல் பிரச்சனைகளில் தலைவலியும் ஒன்று. அதிலும் ஒற்றைத் தலைவலி தான் மிகவும் கொடியது. நிறைய மக்கள் இந்த ஒற்றை தலைவலியால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உள்ளாவார்கள். இவ்வாறு தலை வலி வந்தால், உடனே அதனை போக்க பெரும்பாலானோர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். சில நேரங்களில் இந்த தலைவலியால் மயக்கம், வாந்தி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். பின் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறு உடலானது பலவீனமடைந்துவிடும். பொதுவாக இந்த தலைவலி ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்திற்கும், வாஸ்குலார் மண்டலத்திற்கும் இடையே உள்ள செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித மாற்றம் காரணம். அதுமட்டுமின்றி மூளை செல்களில் ஏற்படும் ஒருவித வித்தியாசமும் தலைவலியை உண்டாக்கும். இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள். ஒன்று மாத்திரை எடுப்பது, மற்றொன்று உணவுகளின் மூலம் சரிசெய்வது. சொல்லப்போனால், மாத்திரைகளை விட உணவுகள் தான் எப்போதும் சிறந்தது. எனவே இந்த தலைவலியை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, பின் சிறிது நேரம் ஓய்வான நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், தலைவலியை சரிசெய்துவிடலாம்.

என்னிக்காவது ஒரு நாள் வரும் தலைவலி சாதாரணமானது. மாசத்துல 15 நாளைக்கும் மேல, 3 முதல் 4 மணி நேரத்துக்கு, தொடர்ந்து 3 மாசங்களுக்கு தலைவலி வந்தா, அது நாள்பட்ட தலைவலி. இதுல மைக்ரேன்னு சொல்ற ஒற்றைத் தலைவலி, மன உளைச்சலால உண்டாகிற டென்ஷன் தலைவலி, தினமும் வரும் தொடர் தலைவலி, ஒரு பக்கம் வரும் ஹெமிக்ரேனியா தலைவலினு நிறைய உண்டு. 

பலரையும் பாடாகப் படுத்தறது மைக்ரேனும், டென்ஷன் தலைவலியும்தான்.ஒற்றைத் தலைவலிங்கிறது ஒரு பக்கம் ஆரம்பிச்சு, அப்புறம் ரெண்டு பக்கமும் பரவும். விண்... விண் னு தெறிக்கும். சாதாரணமா பண்ற வேலைகள் கூட வலியை அதிகமாக்கும். வாந்தி இருக்கும். சத்தமும், வெளிச்சமும் வலியை அதிகப்படுத்தும். வாசனையான பொருட்கள் தலைவலியை உண்டாக்கிறது.

மைக்ரேனுக்கான ஆரம்ப அறிகுறிகள்.

டென்ஷன் தலைவலிங்கிறது சின்னக் குழந்தைலேருந்து, பெரியவங்க வரைக்கும் வரக்கூடியது. தலையோட ரெண்டு பக்கங்கள்ல அல்லது தலை முழுக்க வலிக்கும். பாரமா இருக்கும். வேலை செய்தாலும், செய்யாட்டாலும் வலி இருக்கும். வாந்தி இருக்காது. சத்தமும், வெளிச்சமும் வலியை அதிகப்படுத்தாது. 

மூணாவதா சொன்ன ஹெமிக்ரேனியால தொடர்ச்சியான வலியோட... கூடவே கண் எரிச்சல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகறதெல்லாம் இருக்கும்.
என்னிக்கோ வர்ற சாதா வலிக்கு, நல்ல தூக்கம், வலி நிவாரண மாத்திரைகள், நிம்மதியான சூழல்னு சின்னச் சின்ன விஷயங்களே குணம் தரும்.

ஆனா, வாரத்துல 2 முறைக்கு மேல வலிச்சாலோ, எல்லா நாளும் வலி நிவாரண மாத்திரை தேவைப்பட்டாலோ, டாக்டர் கொடுத்ததைவிட, அதிக மாத்திரை தேவைப்பட்டாலோ, திடீர்னு தலைவலி அதிகமானாலோ, டாக்டரை பார்க்க வேண்டியது அவசியம். திடீர்னு ரொம்ப அதிகரிக்கிற வலி, கூடவே காய்ச்சல், வலிப்பு, பார்வைக்கோளாறு, பேச்சுக் கோளாறு, கழுத்து விரைப்புத் தன்மையெல்லாம் இருந்தா, அது மிக ஆபத்தான தலைவலிக்கான அறிகுறிகள்னு உணர்ந்து, உடனடியா தீவிர சிகிச்சை எடுத்துக்கணும். 

பதப்படுத்தப் பட்ட உணவுகள், இனிப்புகள், ஏரியேட்டட் பானங்கள், எண்ணெய் உணவுகளைத் தவிர்த்து, மன உளைச்சல் இல்லாம இருக்கிறது மூலமா தலைவலியைத் தவிர்க்கலாம்.. என்கிறார் குமார்.

அகன்ற சிறகாக உடைந்த இலைகளை உடையது சுண்டை. வெள்ளை நிறமான பூங்கொத்துக்களையும், கொத்து கொத்தான உருண்டை வடிவமான காய்களையும் உடைய முள்ளுள்ள சிறு செடி இனம். காய் சற்று கசப்புச் சுவை உடையது. காய் வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். காயே மருத்துவக் குணம் உடையது. வீட்டுத் தோட்டங்களிலும் வளர்ப்பதுண்டு. மலைக் காடுகளிலும் இது தானாகவே வளர்வதுண்டு. இந்த வகை சுண்டையை மலைச் சுண்டை என்பார்கள். கோழையை அகற்றவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் மருத்துவக் குணம் உடையது. 

மருத்துவக் குணங்கள்:
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள். மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.
சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.
சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்

லைவலியால் பாதிக்கப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. 

கோபம், டென்ஷன், ஏமாற்றம் போன்ற உளவியல் காணரங்களாலும், அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு கோளாறு, ஈரல் பாதிப்பு போன்ற உடலியல் காரணங்களாலும் தலைவலி உருவாகும். 

இந்த தலைவலிக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மருத்துவ முறையை மேற்கொள்வார்கள். சிலர் வீட்டு வைத்தியமுறையில் சிகிச்சை செய்து கொள்வார்கள். சிலர் வலி நிவாரண தைலங்கள், அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். சிலர் சூடாக காஃபி, டீ அருந்துவார்கள். இதன் மூலம் நிரந்தரத் தீர்வு என்றுமே கிடைக்காது. தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். 

இந்த தலைவலி பலவிதங்களில் வேதனைப் படுத்தும்.

· தலை முழுவதும் வலி தோன்றுதல்.

· நெற்றியின் இரு பக்கங்களிலும் வலி தோன்றுதல்.

· நெற்றியின் ஒரு பக்கத்தில் வலி.

· உச்சந்தலையில் வலி.

· தலையின் பின்பக்கத்தில் வலி.

· கழுத்து பிடறிப் பகுதியில் வலி என பலவகையுண்டு.

இவற்றில் மைக்ரைன் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுவோர் அதிகம்.

ஒற்றைத் தலைவலி உருவாக காரணங்கள்

·இது அவ்வப்போது தோன்றக்கூடியது. கண்களின் மேல்புறம், தலையின் பின்புறம், தலையின் ஒரு பக்கம் என வலி தோன்றும்.

· பொதுவாக கோபம், மன இறுக்கம், மன உளைச்சல், சுற்றுச் சூழலின் அழுத்தம், பரபரப்பு, படபடப்பு, தோல்வி, இயலாமை, அவமானம் போன்ற மனம் சம்பந்தப்பட்ட காரணங்களாலேயே ஒற்றைத் தலைவலி உண்டாகிறது. 

· மது, புகைப்பழக்கம், மசாலாப் பொருட்கள், ஊறுகாய், மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் ஒற்றைத் தலைவலி வருகிறது. 

· நரம்புகள் பாதிக்கப்படும்போதும், குடலில் புண் ஏற்படும்போதும் ஒற்றைத் தலைவலி உருவாகும். 

· ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகரித்து அவை மேல் நோக்கி நீராகக் கோர்த்து தலைவலியை உண்டாக்குகின்றன.

· ஒற்றைத் தலைவலி பொதுவாக ஆண்களை விட பெண்களையே அதிகம் தாக்குகின்றது. மாத விலக்குக் காலங்களிலும், பிரசவமான பெண்களுக்கும் இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம் ஹார்மோன்களில ஏற்படும் மாற்றமேயாகும்.

· குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள், கருப்பை அகற்றப்பட்ட பெண்கள், கருத்தடை சாதனங்கள் உபயோகிக்கும் பெண்கள் இந்த ஒற்றைத் தலைவலியால் அதிகம் பாதிப்படைகின்றனர்.

முன் அறிகுறிகளோடு வரும் தலைவலி

ஆங்கிலத்தில இதற்கு கிளாசிக்கல் மைக்ரைன் என்று பெயர். இந்த தலைவலி தாக்கும் முன் தலைச்சுற்றல், குமட்டல், உடல் சோர்வு, மனச் சோர்வு இதில் ஏதாவது ஒன்று வந்தால் கூட தலைவலி ஆரம்பித்துவிடும். மேலும் சிலருக்கு பார்வை மங்கல், கண்முன் மின்மினி பூச்சிகள் பறப்பது போலவும், கருப்புப் புள்ளிகள் சுழல்வதுபோலவும் தோன்றும். பின் தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.

நிரந்தர வலி

இந்த வகையான தலைவலி இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கு (20 முதல் 45 வயதிற்குள்) ஏற்படக்கூடியதாகும். இந்த தலைவலி வந்தவுடன், தலை வலிக்கும் பக்கத்தில் கண்கள் சிவக்கும். மூக்கிலிருந்து நீர் ஒழுகும். அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். இந்த வலி தினமும் ஓரிருமுறை தாக்கும். எந்த வகையான உள் மருந்து, வெளிமருந்து பயன்படுத்தினாலும் தலைவலி குணமாகாது. தானாக உண்டாகும், பிறகு தானாக குணமாகும். இந்த தலைவலியால் அவதிப்படுபவர்கள் முதலில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. 

ஒற்றைத் தலைவலியை நோய் வருவதற்கான அழைப்பு மணி என்றே சித்தர்கள் கூறகின்றனர்.

ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க

ஒற்றைத் தலைவலி தோன்ற முதற்காரணம் மன பாதிப்புகளே. 

கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமருவான் என்பது பழமொழி.

எனவே டென்ஷன், கோபம், மன உளைச்சல், மன இறுக்கம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

தினமும் காலை, மாலை இரு வேளையும் ஏதாவது ஒரு நேரத்தில் யோகா, தியானம் செய்வது நல்லது.

இளம் சூடான நீரை அருந்த வேண்டும். வலி நிவாரணிகளை அதிகம் உபயோகிக்கக் கூடாது. அது பல பின்விளைவுகளை உண்டாக்கும்.

அதுபோல் வெளிப்பூச்சு மருந்துகள் சில சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கிவிடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

குளிரூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகக்கூடிய மென்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

அதிக சப்தம் காதுகளைப் பாதிக்கும். காதுகள் பாதிகப்பட்டால் தலைவலி உண்டாகும். எனவே அதிக சப்தமுள்ள இடங்களில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.

உடல் தன்மைக்கேற்ப உணவு முறையை மாற்றி அமைத்துக்கொண்டால் தலைவலியி லிருந்து தப்பலாம்.



மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரடோனின் என்ற வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன. பல ஆண்டுகளாக, தலைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால்தான் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் நம்பினார்கள். புதிய கண்டு பிடிப்புகளின்படி, மூளையைச் சேர்ந்த சில செல்களில் ஏற்பட்டுள்ள பரம்பரைக் குறைபாடுகள் தான் காரணம் (gentic disorder) என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படும்போது, மூளைக்குச் செல்லும் செல்கள் அழிந்துபோக வாய்ப்புகள் உண்டு. அதனால் தலைவலி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ஒற்றைத்தலைவலி பரம்பரை நோயா?

ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது. என்றாலும், இது மரபில் உள்ள கோளாறால்தான் என்று திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. கணவன்_மனைவி இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால் பிள்ளைகளுக்கு 75% வாய்ப்பு உண்டு. இருவரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50% வாய்ப்புகள் உண்டு. அவ்வளவுதான். மற்றபடி, கட்டாயம் வரும் என்று சொல்லமுடியாது.

விடுதலைபெற நம்பிக்கையான வழிகள்:

அறிகுறிகளை வைத்தே ஒற்றைத் தலைவலியை நெருங்க விடாமல் செய்ய முடியும். இதற்குப் பல வழிகள் இருந்தாலும் உங்களுக்கு உதவ சிலவழிகள்.

1. உணவுமுறையில் மாற்றம்:

சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவுவகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்த்தல் மிக நல்லது.

2. முறையான தூக்கம்:

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால் நல்ல தூக்கம் வரச்செய்யும் வழி முறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக தூக்கம் வரும்வரை படிப்பது.

3. உடற்பயிற்சி:

உடற்பயிற்சிதான் உடலில் உள்ள வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.

4. சுற்றுச்சூழலில் கவனம்:

அதிக சூரிய வெப்பம் படுதல், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமாக சூழலில் வாழ்தல் ஆகிய சுற்றுச்சுழல்களாலும் சிலருக்கு தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.

5. மது, புகை, காபி தவிர்த்தல்

மது அருந்துதல், புகை பிடித்தல், காபி குடித்தல் சிலருக்கு தலைவலியை உண்டாக்கும். இவை முற்றிலும் நிறுத்தப்படல் வேண்டும். சிலருக்குக் காப்பி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போல் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.

6. கவலை, சோர்வு, மனஅழுத்தம் வேண்டாம்.

அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.

7. தடுப்புமுறைகள்:

ஒற்றைத்தலைவலி எதனால் வந்தது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தலே மிக நல்லது. உதாரணமாக, ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் தலைவலி வந்திருக்கும். திரும்பவும் அந்த நிகழ்ச்சியைக் காணாது தவிர்த்தல். சில பொருட்கள் அலர்ஜியாகி தலைவலி கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.

8. மருந்துகள்:

அதிக அளவில் மருந்து எடுத்துக் கொள்வதும் சிலருக்குத் தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்து வர் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும் மைக்ரோன் தலைவலி வந்தால் இருட்டறைக்குள் சென்று அமைதியாக அமர்ந்து கொள்ள வேண்டும் அல்லது வெளிச்சத்தைப் பார்க்காமல் கண்களை மூடி மறைத்துக் கொள்ள வேண்டும் எனத் தோண்றுகின்றதா? தலைவலியுடன் வயிற்றைப் பிசைவது போன்ற உணர்வு தோன்றி குமட்டலையோ, வாந்தியையோ ஏற்படுத்திவிடுகிறதா? தலைவலி ஒரு பக்கமாகவும், குத்துவது போலவும் இருக்கிறதா? இதுதான் மைக்ரோன் தலைவலி. உலகல் எழுபது சதவீத பெண்கள் மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள். ஒருபக்கமாக ஆரம்பிக்கும் இத்தலைவலி ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும். 25 முதல் 35 வயதுள்ளவர்களை அதிகம் பாதிக்கும். மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 85வீதப் பேருக்கு தலைவலி. 10 வீதபேருக்கு கண் பாதிப்பு. 4 வீதப் பேருக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகிறது.

காரணம்.

மூளை இயக்கத்திற்கு தேவையான செட்டடோனின் ஹோர்மோன் போதுமான அளவு மூளைக்குக் கிடைக்காதது. பெருமூளை ரத்த நாளங்கள் சுருக்கி ரத்த ஓட்டம் தடைப்படுதல், ரத்த மண்டல அழற்சி ஆகியவை முக்கிய காரணங்கள்.

மைக்ரேன் தூண்டல் காரணிகள்.

அதிக சூரியவெம்பம், வானிலை அழுத்த மாற்றங்கள், காற்றோட்ட மற்ற புழுக்கமாக அறைகளில் தங்குதல், அடிக்கடி உறங்கும் முறையை மாற்றிக் கொள்ளுதல், வேலையிலும் ஓய்விலும் மாறுதல்களை உண்டாக்கிக் கொள்ளுதல், ஏதாவது ஓரிடத்திற்கு சென்றிருந்த போது தலைவலி வந்திருந்தால், அதே இடத்தில் வேறு ஒரு சூழ்நிலையில் செல்ல நேர்ந்தாலும் தலைவலி வருதல் மதுவகைகள் சில கீரைகள், பாலடைக்கட்டி, தயிர்,வினிகர், சொக்லேட், ஆடு மற்றும் கோழி போன்றவற்றின் ஈரல், ஈஸ்ட்ரோ ஜென் ஹேர்மோன், மிக அதிகமான உறக்கம், உறக்கமின்மை, மிகைபசி, இறைச்சி, தலைவலி அடிபடுதல், உடலின் உட்புற உறுப்புகளில் உண்டாகும் நோய்கள், அதிக மருந்து சாப்பிடுதல், மாதவிலக்கு, கர்ப்பம். மோசோசோடியம் குளுட்டாமேட், கவலை, மனஇறுக்கம், அசதி, வாய்வழி சாப்பிடும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை மைக்ரேன் தலைவலியை உண்டாக்குகின்றன. மைக்ரேனில் பலவகைகள் உள்ளன.

சிகிச்சை முறை

இதை இரு வழிகளில் குணப்படுத்தலாம். மருந்தில்லா முறை, மருந்து முறை, மருந்தில்லா முறையில் ஒற்றைத் தலைவலி வருவதற்க காரணம். அதை தீவிரமாக்கும் காரணம் உட்பட அனைத்தையும் பகுத்தறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். உணவு முறையில் மாறுதல், கோப்பி, மது தவிர்த்தல், ஆழ்ந்து உறங்குதல், தவறாமல் மலங்கழித்தல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். யோகா பயிலலாம். பயோபீட்பேக் முறையை நோயாளிக்குக் கற்பிக்கலாம்.

தடுப்பு முறை தேவைப்படுவோர்.

ஒரு மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேளைகளில் தலைவலி வந்து மூன்று அல்லது அதற்கு அதிகமான நாட்களுக்கு மேல் நீடித்திருந்தால் தடுப்பு முறை சிகிச்சை தேவைப்படும். நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிக்சையளித்தும் குணமாகாமல் சில வேகைளில் வலி போன்றவை ஏற்படும் பட்சத்தில் தடுப்பு முறை சிகிச்சையளிக்கலாம். ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்படும் பக்க விளைவுகளை கவனத்தில் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் அனைவருக்குமே தடுப்புமுறை சிகிச்சை அளிக்க இயலாது.

மருந்து முறையில் குணப்படுத்தல்

ஒற்றை தலைவலியிலிருந்து உடனே விடுபட மருந்து மாத்திரைகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையே சிறந்தது. நோயின் தன்மை, நோயின் தீவிரம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு உடனடி சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும். நரம்பியல் நிபுணரை ஆலோசிப்பது நல்லது.